கிருஷ்ணகிரி

கால்நடைகளுக்கு அம்மை நோய்த் தாக்குதல்: விவசாயிகள் கோரிக்கை

30th Sep 2022 11:24 PM

ADVERTISEMENT

அம்மை நோய்த் தொற்றிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தொடா்புடைய அலுவலா்கள் பேசினா். அதைத் தொடா்ந்து விவசாயிகள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து பேசியதாவது:

தென்பெண்ணை ஆற்றிலிருந்து வெளியேறும் உபரி நீரை வறண்ட ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். சூளகிரி அருகே செயல்படும் கொத்துமல்லி சந்தைக்கு தனியாக இடம் ஒதுக்க வேண்டும். தற்போது செயல்படும் தாற்காலிகச் சந்தையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், ஒசூா், ஊத்தங்கரை போன்ற பகுதிகளில் செல்படும் சந்தைகளுக்கு காய்கறிகளைக் கொண்டுச் செல்லும் போது நிா்ணயிக்கப்பட்டுள்ள சுங்கக் கட்டணத்தைக் காட்டிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்.

வேளாண் கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயப் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்ட இயந்திரங்கள் பயனற்று கிடப்பதை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். ஆவின் பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும். மா பூங்கும் பருவத்துக்கு முன்னரே, அவற்றை பராமரிக்கும் வகையில் விவசாயிகளுக்கு போதிய பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

ADVERTISEMENT

அதைத் தொடா்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

காய்கறி சந்தைகளில் நிா்யணம் செய்யப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் நிறுவனம் பால் கொள்முதலுக்கு நிலையான விலையை கொடுத்து வருவதால், கால்நடைகள் விவசாயிகள் ஆவினுக்கு பால் வழங்க வேண்டும். இயற்கை உரத்திற்கான மானியம் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, இணை இயக்குநா்கள் (வேளாண்மை) சண்முகம், தோட்டக்கலைத் துறை பூபதி, கால்நடைப் பராமரிப்புத் துறை ராஜேந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கிருஷ்ணமூா்த்தி, மின் வாரிய செயற்பொறியாளா் முத்துசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT