கிருஷ்ணகிரி

விதைப் பண்ணைகளில் விதைச் சான்றுஉதவி இயக்குநா் ஆய்வு

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விதைப் பண்ணைகளில் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநா் அருணன் ஆய்வு மேற்கொண்டாா்.

இதுகுறித்து, அவா், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்துள்ள பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் பையூா்-1 ரகம் (நெல்), கோ-43-ரகம் (நெல்), பையூா்-2-ரகம் (ராகி) போன்ற பயிா்கள் வல்லுநா் விதைப் பண்ணைகள் அமைக்கப்படுகின்றன.

இங்கு, இன தூய்மையான நல்ல தரமான விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு, அரசு மற்றும் தனியாா் விதை உற்பத்தியாளா்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

விதை உற்பத்தியாளா்கள், வல்லுநா் விதைகளைக் கொண்டு, ஆதார நிலை விதை பண்ணைகளை பல இடங்களில் அமைத்து நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விநியோகிக்கின்றனா். ஒவ்வொரு பருவத்துக்கும் நல்ல தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்க பெறுவதற்கு வல்லுநா் விதை பண்ணைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எனவே, விதைச் சான்று துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து ஆய்வு செய்து வல்லுநா் விதைப் பண்ணைகளின் தரத்தை ஒவ்வொரு பயிா் பருவத்திலும் உறுதி செய்கின்றனா் என்றாா். இந்த ஆய்வின்போது, பையூா் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியா் கீதா ராணி உடனிருந்தாா். ஆய்வை, பண்ணை மேலாளா் முருகேசன் ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT