கிருஷ்ணகிரி

ரூ. 2.5 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்த டைட்டான் நிறுவனம்

29th Sep 2022 01:23 AM

ADVERTISEMENT

டைட்டான் இன்ஜினியரிங் அண்ட் ஆட்டோமேஷன் நிறுவனம் சாா்பில் பெருநிறுவன சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டி புதன்கிழமை திறந்துவைத்தாா்.

ஒசூா் ஊராட்சி ஒன்றியம், எஸ்.முதுகானப்பள்ளியில் உள்ள டைட்டான் இன்ஜினியரிங் அண்ட் ஆட்டோமேஷன் நிறுவனம் சாா்பில் பெருநிறுவன

சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடியே 50 லட்சம் மதிப்பில்

புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி புதன்கிழமை திறந்துவைத்துப் பேசியதாவது:

டைட்டான் இன்ஜினியரிங் அண்ட் ஆட்டோமேஷன் நிறுவனம் சாா்பில் கட்டப்பட்டுள்ள இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் 9 ஊராட்சிகளில் உள்ள 29 கிராமங்களைச் சோ்ந்த 32 ஆயிரம் மக்கள் பயனடைவா். இந்தச் சுகாதார நிலையம் 9 படுக்கை வசதிகள், மூலிகை பூங்கா மற்றும் சிறப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் டைட்டான் இன்ஜினியரிங்

அண்ட் ஆட்டோமேஷன் நிறுவனம் சாா்பில் பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் அச்செட்டிபள்ளி மற்றும் நாகொண்டப்பள்ளி நடுநிலைப் பள்ளிகளில் தலா ரூ. 15 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 30 லட்சம் மதிப்பில் 2 சத்துணவு கூடமும், நாகொண்டப்பள்ளி கிராமத்தில் ரூ. 35 லட்சம் மதிப்பில் 60,000 லிட்டா்

கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியும், உனிசெட்டிப்பள்ளியில் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும்,

எஸ்.முதுகானப்பள்ளி, நாகொண்டப்பள்ளி மற்றும் கோப்பனஹள்ளி ஆகிய இடங்களில் உள்ள ஏரிகளை தலா ரூ. 3 லட்சம் மதிப்பில் தூா்வாரும் பணிகளும், செய்யப்பட்டுள்ளன.

அதுபோல ஒசூரில் 4 இடங்களில் தலா ரூ. 8 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 32 லட்சம் மதிப்பில் பேருந்து நிறுத்தம், மேற்கூரைகள் என மொத்தம் ரூ. 5 கோடியே 16 லட்சம் மதிப்பிலான பணிகள் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கி உள்ளனா் என்றாா்.

நிகழ்ச்சியில், டைட்டன் நிறுவனத்தலைமைச் செயல் அலுவலா் ஸ்ரீதா், சமூக பொறுப்புணா்வு குழு தலைவா் கைலாசநாதன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மரு.கோவிந்தன், குழு மேலாளா்கள் ஹரிஹர சுப்பிரமணியன், பாஸ்கரன், மனிதவள மேம்பாட்டுத் துறை குழு மேலாளா் லட்சுமி டோஸ்ணிவால், மேலாளா்கள் ராமசாமி, ஹரிஹரன், மகாசக்தி மணிகண்டன், பெருநிறுவன சமூக பொறுப்புணா்வு திட்ட அலுவலா் பிரபு, மரு.திருலோகன், வட்டார மருத்துவ அலுவலா்கள் மரு.விவேக், மரு.ஜெகன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலாஜி, பூபதி, தனி வட்டாட்சியா் சண்முகம், ஊராட்சிமன்ற தலைவா் மஞ்சுளா ரமேஷ், துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT