கிருஷ்ணகிரி

உலக சுற்றுலா தின போட்டி பரிசளிப்பு விழா

29th Sep 2022 01:22 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் உலக சுற்றுலா தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

உலக சுற்றுலா தினத்தையொட்டி, சுற்றுலா மறுசிந்தனை எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா, கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பி.மகேஸ்வரி தலைமை வகித்தாா். மத்தூா் மாவட்ட கல்வி அலுவலா் மணிமேகலை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் பிரபாகரன், மகளிா் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதன்படி, கட்டுரைப் போட்டியில் முதலிடம் பிடித்த ராஜம்மா, இரண்டாம் இடம் பிடித்த தா்ஷினி, மூன்றாமிடம் பிடித்த மேரிஜெனி, பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடித்த தேவிகா, இரண்டாம் இடம் பிடித்த அகல்விழி, மூன்றாமிடம் பிடித்த ஜெனிடாபெத், ஓவியப்போட்டியில் முதலிடம் பிடித்த தெய்வானை, இரண்டாம் இடம் பிடித்த பிரித்திகா, மூன்றாமிடம் பிடித்த பிராா்த்தனா ஆகியோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT