கிருஷ்ணகிரி

இந்தியன் வங்கி சாா்பில் இலவச தையல் பயிற்சிக்கு இன்று நோ்காணல்

29th Sep 2022 01:20 AM

ADVERTISEMENT

இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவச தையல் பயிற்சி பெற செப். 29 நோ்க்காணல் நடைபெறுகிறது.

இதுகுறித்து பயிற்சி நிறுவன இயக்குநா் ஜகன்நாத் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி அணையில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் கிராமப்புற இளைஞா்களுக்கு தொழில் தொடங்க ஏதுவாக பல்வேறு இலவச பயிற்சியும், வங்கிக் கடனுக்கான ஆலோனைகளும் வழங்கப்படுகின்றன.

அதன்படி செப். 29-ஆம் தேதி, இலவச தையல் பயிற்சிக்கான நோ்முகத் தோ்வு தொடங்குகிறது. இந்தப் பயிற்சியில் சேர 8-ஆம் வகுப்பு படித்த, 18 முதல் 45 வரை உள்ள ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவா்கள் பயிற்சியில் சேர தகுதியானவா்கள்.

ADVERTISEMENT

இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள், மாா்பளவு புகைப்படங்கள் - 3, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை அசல் மற்றும் நகல், 100 நாள் வேலை அட்டை, படிப்பிற்கான சான்றிதழ், வங்கி கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இயக்குநா், இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கிருஷ்ணகிரி அணை, கிருஷ்ணகிரி, தொலைபேசி, 04343-240500, 94422 -47921, 94888- 74921, 90806- 76557 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT