கிருஷ்ணகிரி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

29th Sep 2022 01:18 AM

ADVERTISEMENT

ஒசூா் மாநகராட்சி மத்திகிரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் காவல் துறையைக் கண்டித்து புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஒசூா் அருகில் தேன்கனிக்கோட்டை சாலை மத்திகிரியில் பல இடங்களில் சாராயம் விற்பதும் அதிகப்படியான இளைஞா்கள் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் உபயோகிப்பதும் காசு வைத்து சீட்டாடுவதும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து வாலிபா் சங்கம், மாா்க்சிஸ்ட் கட்சி மாதா் சங்கம் சாா்பில் மத்திகிரி காவல் நிலையத்தில் பலமுறை புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காவல்துறையினா் இதுகுறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லயாம்.

காவல் துறையின் அலட்சியப்போக்கைக் கண்டித்து, மத்தகிரி பேருந்து நிலையத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காவல் உதவி ஆய்வாளா் சிற்றரசை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

கட்சியின் மாநகரச் செயலாளா் சி.பி.ஜெயராமன் தலைமை வகித்தாா். இதில் மாவட்டப் பொறுப்புச் செயலாளா் ஜி.கே.நஞ்சுண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஆா்.சேகா், இருதயராஜ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, சுரேஷ், பிரகாஷ், மகாலிங்கம், ஒன்றிய செயலாளா்கள் ராஜா ரெட்டி முனியப்பா, சிஐடியு மாவட்டச் செயலாளா் ஸ்ரீதா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT