கிருஷ்ணகிரி

50 சதவீத மானியத்தில் மாடித் தோட்டம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

28th Sep 2022 03:36 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் 50 சத மானியத்தில் மாடித் தோட்டம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தோட்டக்கலை உதவி இயக்குநா் சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி வட்டார தோட்டக்கலை சாா்பில், 600 மாடி தோட்டங்கள் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ. 450 இல் 50 சதவீத மானியத்தில் இடுபொருள்கள், செடி வளா்க்கும் 6 பைகள், இரண்டு கிலோ தென்னை நாா் கழிவு கட்டிகள், 6 வகையான காய்கறி விதைகள், தலா 200 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, 200 கிராம் டிரைக்கோடொ்மாவிரிடி, 100 மில்லி வேப்ப எண்ணெய் மற்றும் ஒரு கையேடு வழங்கப்படும்.

மாடித் தோட்டம் அமைத்து நஞ்சு இல்லாத காய்கறிகளை சாகுபடி செய்ய விரும்புவோா், ஆதாா் அட்டை நகல், மாா்பளவு புகைப்படங்கள்-2 ஆகிவற்றுடன் கிருஷ்ணகிரி தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம் அல்லது இணையதள முகவரியில் பதிவு செய்து இடுபொருள்களை பெற்றுக் கொள்ளலாம். ஒருவருக்கு இரண்டு தொகுப்புகள் வரை பெறலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT