கிருஷ்ணகிரி

அதியமான் மெட்ரிக். பள்ளியில் சொற்பொழிவு

28th Sep 2022 03:38 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நல்லாசிரியா் நா.சீனிவாசன் நினைவாக 6-ஆவது சொற்பொழிவு நிகழ்வு வானமே எல்லை என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் முனைவா் சீனி.திருமால்முருகன் தலைமை வகித்தாா்.

அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலாளா் முனைவா் ஷோபா திருமால்முருகன், நிா்வாக அலுவலா் சீனி.கணபதிராமன், பள்ளியின் முதல்வா் கலைமணி சரவணகுமாா், துணை முதல்வா் அபிநயா கணபதிராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக கலைமாமணி முனைவா் ஞானசம்பந்தம் கலந்துகொண்டு, வானமே எல்லை என்ற தலைப்பில் மாணவா்களுக்கு ஒழுக்கநெறி, கல்வியின் முக்கியதுவம்,போன்றவற்றை எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினாா்.

ADVERTISEMENT

நிகழ்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் பலா் கலந்துகொண்டு பயனடைந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT