கிருஷ்ணகிரி

கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பினா் எம்.பி.யிடம் மனு அளிப்பு

28th Sep 2022 03:39 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் அனைத்திந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பின் சாா்பில் அ. செல்லக்குமாா் எம்.பி.யிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைத்திந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பினா் அதன் நிறுவன தலைவா் மோகன்தாஸ் தலைமையில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் செல்லக்குமாரிடம் மனு அளித்தனா். அதில் பூட்டப்பட்ட சபைகள் திறக்க வேண்டும்.

போதகா்கள் மீது பொய் வழக்குகள் பதிவதை நிறுத்த வேண்டும். கல்லறை தோட்டத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும். பட்டா இல்லாத சபைகளுக்கு பட்டா வழங்க வேண்டும். சுதந்திரமாக ஊழியம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணை தலைவா் சேகா், எஸ்சிஎஸ்டி பிரிவு மாநில அமைப்பாளா் ஆறுமுக சுப்பிரமணி, முன்னாள் மாவட்டத் தலைவா் நாஞ்சில் ஜேசுதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT