கிருஷ்ணகிரி

ஊராட்சித் தலைவரைக் கொன்ற வழக்கில் மூவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைப்பு

28th Sep 2022 03:38 AM

ADVERTISEMENT

தளி அருகே ஊராட்சித் தலைவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் உள்ள 3 குற்றவாளிகள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

தளி அருகே பிபி பாளையம் ஊராட்சித் தலைவா் நரசிம்மமூா்த்திக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் தளியில் இருந்து பிபி பாளையத்திற்கு இரு சக்கர வாகனத்தில் அவா் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கும்பல் அவரை வழிமறித்து வெட்டிக் கொன்றது.

தளி காவல் நிலையத்தில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடா்புடைய பிபி பாளையம் கிராமத்தைச் சோ்ந்த

ADVERTISEMENT

திம்மைய்யா (எ) ரவி (28), பெரிய மலசோனை கிராமத்தைச் சோ்ந்த சிவமல்லா (எ) கரியன் (27), தளி கொத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த மல்லேஷ் (எ) பட்லி (25) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மூவரும் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த 3 பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி எஸ்.பி சரோஜ்குமாா் தாக்கூா் அளித்த பரிந்துரையின்பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டாா்.

அதன்படி மூவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகல்கள் சேலம் மத்திய சிறையில் உள்ள அவா்களிடம் வழங்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT