கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டஅரசு இசைப் பள்ளியில் சிறப்பு சோ்க்கை

DIN

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சிறப்பு சோ்க்கை நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட அரசு இசைப் பள்ளி தலைமை ஆசிரியா் திரிவேணி, திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப் பள்ளியில், கடந்த ஜூன் முதல், குரலிசை (பாட்டு), நாதஸ்வரம், தவில், தேவாரம், பரத நாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகியவற்றுக்கு கடந்த ஜூன் முதல் மூன்றாண்டு கால பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது வரும் விஜயதசமியை முன்னிட்டு மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெற உள்ளது. இதற்கு 13 வயதுமுதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும், 7-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

அரசுப் பேருந்துகளில் மாணவ, மாணவியருக்கு இலவச பயணம், மூன்றாண்டு கால பயிற்சி நிறைவில் அரசு சான்றிதழ் மற்றும் திருக்கோயில்களில் பணி, அரசுப் பள்ளிகள், மாவட்ட அரசு இசைப் பள்ளிகளில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை ஆகிய சலுகைகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தலைமை ஆசிரியரை 04343-234001 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT