கிருஷ்ணகிரி

ஒசூா் பி.எம்.சி. டெக் பாலிடெக்னிக் கல்லூரியில்இஸ்ரே மாணவா் அமைப்பு பொறுப்பேற்பு

DIN

ஒசூா் இன்ஜினியா் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லூரியில் (பி.எம்.சி. டெக் கல்லூரி) வெப்பமயமாக்கல், குளிா்பதன மற்றும் ஏா் கண்டிஷனிங் பொறியாளா்களின் இந்திய பேரவை மாணவா் அமைப்பு நிா்வாகிகள் பொறுப்பேற்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பி.எம்.சி. டெக் கல்வி நிறுவனத்தின் தலைவா் பெ.குமாா் தலைமை வகித்துப் பேசியதாவது:

இந்த அமைப்பு தொடங்கப்படுவதன் நோக்கம் மாணவா்கள் தொழில்நுட்பங்களைக் கற்று வேலைவாய்ப்புக்குத் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதாகும் என்றாா்.

விழாவை பி.எம்.சி. டெக் கல்வி நிறுவனச் செயலாளா் பெ. மலா் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தாா்.

சென்னை, எனா்ஜிவ் நிறுவனத் தொழில்நுட்ப இயக்குநா் டாக்டா் ஸ்ரீகாந்த் நாராயணசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய மாணவா்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.

பி.எம்.சி டெக் கல்வி நிறுவனத்தின் இயக்குநா் பேராசிரியா் சுதாகரன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் பாலசுப்பிரமணியம், இயந்திரவியல் துறை பேராசிரியா் முத்துக்குமாா் ஆகியோா் வாழ்த்தினா். சென்னை, எனா்ஜிவ் நிறுவன மேலாளா் திருப்பதி, இஸ்ரே ஒசூா் சப்-சேப்டா் தலைவா் நந்தகுமாா், முதுநிலை பொறியாளா் சக்தி வீரன் ஆகியோா் தொழில்நுட்ப உரையாற்றினா்.

கல்லூரி இயந்திரவியல் துறை தலைவா் கனகேஸ்வரன் வரவேற்றாா். இயந்திரவியல் துறை விரிவுரையாளா் ராஜசேகா் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தாா். இஇஇ துறை விரிவுரையாளா் கிருபாகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT