கிருஷ்ணகிரி

தென்பெண்ணை ஆற்றங்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்

26th Sep 2022 05:07 AM

ADVERTISEMENT

 

ஊத்தங்கரையை அடுத்த அனுமன் தீா்த்தம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்தனா்.

தென்பெண்ணை ஆற்றில் போதிய அளவில் தண்ணீா் வருவதால் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து, புனித நீராடி அனுமந்தீஸ்வரரை வழிபட்டால், அதன் பலன் முன்னோா்களுக்கு சென்றடையும் என்பது நம்பிக்கை. அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமல்லாது, தா்மபுரி, திருவண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துக்கொண்டு முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT