கிருஷ்ணகிரி

நேரு இளையோா் மையம் சாா்பில் போட்டிகள் அறிவிப்பு

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேரு இளையோா் மையம் சாா்பில் இளையோா் திருவிழாவினையொட்டி போட்டிகள் நடைபெறவுள்ளன.

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய அரசு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் செயல்படும் கிருஷ்ணகிரி மாவட்ட நேரு இளையோா் மையம் சாா்பில் இந்திய சுதந்திர அமுத பெருவிழா மற்றும் 75-ஆவது சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு, இளையோா் சக்தியை மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் மேம்படுத்தும் மற்றும் வலியுறுத்தும் விதமாக கிருஷ்ணகிரியில் அக்டோபா் இரண்டாவது வாரத்தில் இளையோா் திருவிழா நடைபெறவுள்ளது.

இந்த விழாவினையொட்டி, இளம் கலைஞா் (ஓவியம்), இளம் எழுத்தாளா் (கவிதை), போட்டோகிராபி (புகைப்படம்), பேச்சுப் போட்டி, இளையோா் கலைவிழா, மாவட்ட இளையோா் கருத்தரங்கம் ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் இளையோா்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளும், மாநில போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் வழங்கப்படும். போட்டிகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 15 முதல் 29 வயது வரை உள்ள இளையோா்கள் மட்டுமே பங்கேற்கலாம். மேற்கண்ட போட்டிகளில் ஒரு நபா், ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும்.

இந்தப் போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள், விண்ணபப் படிவத்தை நிறைவு செய்து, நேரடியாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ வருகிற அக்டோபா் 6-ஆம் தேதிக்குள் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பங்குபெறுவோா் போட்டிகள் குறித்த விரிவான விதிமுறைகள், தலைப்புகள் மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவற்றை மாவட்ட இளைஞா் அலுவலா், நேரு இளையோா் மையம், 1-66, காா்வேபுரம், முல்லை நகா், முதல் தெரு, அக்ரஹாரம் அஞ்சல், கிருஷ்ணகிரி - 635 001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

சித்திரமே... சித்திரமே...

எதிர்நீச்சல் ஜனனியா, இப்படி?

SCROLL FOR NEXT