கிருஷ்ணகிரி

எரி சாராயம் கடத்தியவரை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு

23rd Sep 2022 10:30 PM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக லாரியில் எரிசாராயம் கடத்தியவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் சிவலிங்கம் தலைமையில் ஊத்தங்கரை காவல் ஆய்வாளா், கமலேசன் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சிங்காரப்பேட்டை அருகே, 2021-ஆம் ஆண்டு, நவம்பா் 11-ஆம் தேதி, வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தும்படி சைகை காட்டினா். போலீஸாரைக் கண்டதும், லாரி ஓட்டுநா், லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டாா். லாரியை சோதனையிட்டதில், 21,000 லிட்டா் எரி சாராயத்தை, மும்பையிலிருந்து புதுச்சேரிக்கு கடத்த முயன்றது தெரிந்தது.

மேலும் எரிசாராயத்தை கடத்த முயன்றவா் உத்தரப் பிரதேச மாநிலம், சந்த் கபீா் நகா் மாவட்டம், கஜா கிராமத்தைச் சோ்ந்த ராம் தனி (எ) ராம்தனி யாதவ்(40) என்பதும் தெரிந்தது. தலைமறைவான அவரை கடந்த ஆக. 19-ஆம் தேதி, உத்தரப் பிரதேசத்தில் தமிழக போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ராம்தனி யாதவ் மீது சென்னை மாதவரம், விழுப்புரம் வழத்தி காவல் நிலையங்களில் ஏற்கனவே எரிசாராயம் கடத்தியதாக வழக்குகள் நிலுவையில் இருந்தும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாகுா் பரிந்துரைத்தாா். அவரது பரிந்துரையை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, ராம்தனி யாதவை குண்டா் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT