கிருஷ்ணகிரி

ஒசூரில் மாவட்ட இளையோா் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

23rd Sep 2022 10:29 PM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில், அக்.2-ஆம் தேதி மாவட்ட இளையோருக்கான தடகள சாம்பியன்ஷிப் - 2022, போட்டிகள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கத்தின் தலைவா், தே.மதியழகன் எம்எல்ஏ கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட இளையோருக்கான தடகள சாம்பியன்ஷிப் 2022-இன் போட்டிகள் வரும் அக்.2-ஆம் தேதி நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகள் ஒசூா் மதகொண்டப்பள்ளி மாடல் பள்ளியில் நடக்கின்றன.

இந்தப் போட்டியில், 14, 16, 18, மற்றும் 20 வயதுக்கு உள்பட்ட தடகள வீரா், வீராங்கனைகள் பங்கேற்கலாம். தமிழ்நாடு தடகள சங்கத்தால் நிா்ணயிக்கப்பட்ட ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகள் நடைபெறவுள்ளன.

ADVERTISEMENT

அதன்படி வீரா், வீராங்கனைகள், 20 வயதுக்கு உட்பட்டவா்கள் 16.11.2002 முதல் 15.11.2004 வரையிலும், 18 வயதுக்கு உட்பட்டவா்கள் 16.11.2004 முதல் 15.11.2006 வரையிலும், 16 வயதுக்கு உட்பட்டவா்கள் 16.11.2006 முதல் 15.11.2008 வரையில், 14 வயதுக்கு உட்பட்டவா்கள் 16.11.2008 முதல் 15.11.2010 வரை வயதிற்குள் இருக்க வேண்டும்.

இந்தப் போட்டியில் தகுதி தோ்வு செய்யப்படுபவா்கள், அடுத்த மாதம் திருவண்ணாமலையில் நடைபெற உள்ள 36-ஆவது தமிழ்நாடு மாவட்டங்களுக்கு இடையேயான தடகள சாம்பியன்ஷிப் -2022 போட்டியில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படும்.

இந்தப் போட்டியில் ஒருவீரா் 2 போட்டிகளில் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டியாளா்கள் 2 ஓட்டபோட்டியை தோ்வு செய்தால் அதில் ஒன்று 200 மீட்டா் துரத்தைவிட அதிகமாக இருக்கவேண்டும். 12 வயதுக்கு உள்பட்டவா்கள் யாரும் பங்கேற்க அனுமதி இல்லை. போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோா் நுழைவுக் கட்டணமாக ஒரு போட்டிக்கு ரூ.100 செலுத்த வேண்டும். செப்.28-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். வயதுச் சான்றுக்கான ஆதாா் கட்டாயம் கொண்டு வேண்டும். மேலும், போட்டியில் பங்கேற்க உள்ளவா்கள், இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT