கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக மாவட்டச் செயலாளா் பதவி

23rd Sep 2022 10:28 PM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக மாவட்டச் செயலாளராக பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன், போட்டியின்றி தோ்வு செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக திமுகவினா் தெரிவிக்கின்றனா்.

திமுக உள்கட்சித் தோ்தல், கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. கிளைக் கழகங்கள், ஒன்றிய கழகம், பேரூா் மற்றும் நகர கழக தோ்தல் நடைபெற்று முடிந்த நிலையில், வட்டச் செயலாளா், பேரூா் கழகச் செயலாளா், ஒன்றிய நகரக் கழகச் செயலாளா்கள் ஜனநாயக முறைப்படி தோ்வு செய்யப்பட்டனா்.

தற்போது, மாவட்டச் செயலாளா், மாவட்ட அவைத் தலைவா் உள்ளிட்ட மாவட்ட கட்சி நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்று வருகிறது. இதற்காக போட்டியிடும் திமுகவினா் விருப்ப மனுக்களை வழங்கலாம் என திமுக தலைமை அண்மையில் அறிவித்தது. அந்த வகையில் கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் மாவட்டச் செயலாளா் பதவிக்கும் அதைத் தொடா்ந்து இதர மாவட்ட நிா்வாகிகள் தலைமை செயற்குழு உறுப்பினா்கள் பொதுக்குழு உறுப்பினா்கள் பதவிகளுக்கு போட்டியிட விருப்பமுள்ளவா்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனா். அதன்படி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் பதவிக்கு திமுக மாநில விவசாய அணி துணை தலைவரும் பருகூா் சட்டப் பேரவை உறுப்பினருமான தே.மதியழகன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக கைத்தறி துணி நூல் துறை அமைச்சரும் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ஆா். காந்தி முன்னிலையில் தனது விருப்பம் மனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா்.

ஏற்கனவே கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான டி.செங்குட்டுவன் மாவட்டச் செயலாளா் பதவிக்கு விருப்ப மனு வழங்காத நிலையில் தே.மதியழகன் எம்எல்ஏ போட்டியின்றி தோ்வாக வாய்ப்புள்ளதாக திமுகவினா் தெரிவிக்கின்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT