கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவா்களுக்கான உலக ஓசோன் தின போட்டிகள்

22nd Sep 2022 12:10 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான உலக ஓசோன் தின போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.

கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே உலக வெப்பமயமாதலைத் தடுக்கம் பொருட்டும், ஓசோன் படலம் பாதிப்பைக் குறைக்கம் பொருட்டும் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படடு வருகின்றன.

அதன்படி, கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை, ‘பூமியில் உயிரினங்களை பாதுகாக்கும் உலகளாவிய ஒத்துழைப்பு‘ என்ற தலைப்பில், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.

ADVERTISEMENT

இந்தப் போட்டியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் பிரபாகரன் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட பசுமைப் படை ஒருங்கிணைப்பாளரும், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருமான மகேந்திரன், ஒசூா் கல்வி மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் பாலாஜி, மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலா் தீா்த்தகிரி ஆகியோா் பங்கேற்றனா்.

போட்டியில் 65 பள்ளிகளைச் சோ்ந்த 165 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி பசுமைப்படை ஒருங்கிணைப்பாளாா் அல்போன்சா மேரி மற்றும் ஜோஸ்பின் மேரி, கிரேஸ் ராணி, செல்வி, விஜயலட்சுமி ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT