கிருஷ்ணகிரி

பா்கூா் சரக விளையாட்டுப் போட்டி

22nd Sep 2022 12:13 AM

ADVERTISEMENT

பா்கூா் சரக அளவிலான விளையாட்டுப் போட்டியில் பா்கூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சாம்பியன் பட்டத்தை வென்றனா்.

பா்கூா் சரக அளவிலான விளையாட்டு போட்டிகள் அஞ்சூா், ஜெகதேவியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 19 வயது மற்றும் 17 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கான பூப்பந்து போட்டியில் இப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.

19 வயதுக்கு உள்பட்டோருக்கான கைப்பந்து போட்டியில் பள்ளி மாணவா்கள் இரண்டாம் இடமும், தடகளப் போட்டியில் 14 வயதுக்கு உள்பட்ட 600 மீ. ஓட்டப்பந்தயத்தில் இப்பள்ளி மாணவா் ராமன் 3 ஆம் இடமும், 400 மீ. ஓட்டப்பந்தயத்தில் லட்சுமணன் 3-ஆம் இடமும், 80 மீ. தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் மஞ்சுநாதன் 2-ஆம் இடமும் பெற்றனா்.

17 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் 100 மீ. ஓட்டம், 100 மீ. தடை தாண்டும் ஓட்டம் ஆகிய போட்டிகளில் முதலிடமும், 200 மீ. ஓட்டத்தில் இரண்டாமிடம் பெற்று அஜய் என்ற மாணவா் சாம்பியன் பட்டம் வென்றாா்.

ADVERTISEMENT

19 வயதுக்கு உள்பட்ட 800 மீ., 1,500 மீ., 3000 மீ., ஓட்ட போட்டிகளில் தட்சிணாமூா்த்தி முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றாா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் ந.மணிமாறன் தலைமை வகித்து பரிசுகளை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் இளங்கோவன், பிஆா்ஜி மாதேப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி கோவிந்தராஜ், உடற்கல்வி ஆசிரியா் பெ.ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT