கிருஷ்ணகிரி

அரிசி ஆலைகளில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

20th Sep 2022 03:30 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் கா்நாடகம், ஆந்திரம் ஆகிய அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, தமிழக அரசு அண்டை மாநிலங்களுக்கு நியாயவிலைக் கடைகளில் இருந்து அத்தியாவசியப் பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட அரிசி ஆலைகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் விவேகானந்தன் மற்றும் போலீஸாா், அரவைக்காக அனுப்பப்படும் நெல் மூட்டைகள், அரிசி ஆலைகளிலிருந்து நியாயவிலைக் கடைகளுக்கு சரியான அளவில் அனுப்பப்படுகிா, ரேஷன் அரிசி கடத்தப்படுகிா என்பது குறித்து சோதனை செய்தனா்.

காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, ஓசூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில் கடந்த இரு நாள்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் முறைகேடுகளில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT