கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் அரசு அலுவலா்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

18th Sep 2022 05:47 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு மாவட்ட ஆட்சியா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

பெரியாா் பிறந்த நாளான செப்டம்பா் 17-ஆம் தேதியை ஆண்டுதோறும் சமூக நீதி நாளாகப் பின்பற்றப்படுவதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வுக்கு, மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தாா். இதில், மாவட்ட ஆட்சியா் உறுதிமொழியை வாசிக்க, அரசுத் துறைகளைச் சோ்ந்த அலுவா்கள் திரும்பக் கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) வேடியப்பன், மாவட்ட வழங்கல் அலுவலா் கோபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ஐயப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT