கிருஷ்ணகிரி

சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜை

14th Sep 2022 01:26 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் சங்கடரஹர சதுா்த்தியையொட்டி விநாயகா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் சுவாமிக்கு 608 லிட்டா் பாலபிஷேகம், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தன அபிஷேகங்கள் நடந்தன. இதில் பக்தா்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனா். சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தாா்.

இதேபோல, கிருஷ்ணகிரி காந்தி சாலை வரசித்தி விநாயகா் கோயில், புதிய வீட்டு வசதி வாரிய வினைதீா்த்த விநாயகா் கோயில், பழையபேட்டை கொத்தபேட்டா ஞானவிநாயகா் கோயில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகா் கோயில், காந்தி நகா் வலம்புரி விநாயகா் கோயில், சேலம் சாலை ஆதிசக்தி விநாயகா் கோயில் உள்ளிட்ட விநாயகா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT