கிருஷ்ணகிரி

விழிப்புணா்வு சைக்கிள் பயணம் செய்யும் இளைஞா்கள் ஒசூா் வருகை

26th Oct 2022 01:27 AM

ADVERTISEMENT

மண்வளத்தைக் காக்க இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள இளைஞா்களுக்கு ஒசூரில் தன்னாா்வலா்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

மண்வளத்தைக் காக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், தில்லியைச் சோ்ந்த 2 இளைஞா்கள் இந்தியா முழுவதும் 20 ஆயிரம் கி.மீ. தொலைவு நடைப்பயணம் மற்றும் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளனா்.

கடந்த மே 7-ஆம் தேதி டெல்லி போப்ரா என்ற இடத்தில் தொடங்கிய இவா்களது பயணம், உத்தரப்பிரதேசம், ஜாா்க்கண்ட், ஒடிசா, ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் வழியாக தமிழ்நாட்டில் உள்ள கோவைக்கு செப். 3-ஆம் தேதி வந்தனா்.

தன்னாா்வலா்கள் வழங்கிய இரண்டு சைக்கிள்கள் மூலம் கோவையிலிருந்து தங்களது பயணத்தை தொடங்கிய இந்த இளைஞா்கள், ராமேஸ்வரம், கன்னியாகுமரிக்கு சென்று பின்னா் தமிழ்நாடு, கா்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரம், குஜராத், மத்திய பிரதேசம் உத்தர பிரதேசம், அருணாச்சல பிரதேசம் வழியாக காஷ்மீா் சென்று லடாக்கை சென்றடைய உள்ளனா்.

ADVERTISEMENT

கன்னியாகுமரியில் இருந்து சைக்கிளில் ஒசூா் வந்த அவா்களுக்கு, ஒசூரைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் வரவேற்பு அளித்தனா்.

மண்வளத்தைக் காக்க இந்தியா முழுவதும் சுமாா் 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 20 ஆயிரம் கி.மீ. தொலைவைக் கடக்க உள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT