கிருஷ்ணகிரி

பேட்மின்டன் போட்டி: ஒசூா் மாணவி சிறப்பிடம்

26th Oct 2022 01:27 AM

ADVERTISEMENT

மாநில அளவிலான பேட்டமின்டன் போட்டியில் ஒசூா் மாணவி செந்நிலா இரண்டாம் இடம் பெற்றுள்ளாா்.

தமிழ்நாடு பேட்மின்டன் அசோசியேஷன் சாா்பில், திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த அக். 20 முதல் 23-ஆம் தேதி வரை 11 வயதுக்கு உள்பட்ட வீரா், வீராங்கனையருக்கான தமிழ்நாடு பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 250-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

பெண்களுக்கான போட்டியில் ஒசூரைச் சோ்ந்த சி.சி.செந்நிலா மாநில அளவில் இரண்டாவது இடத்தைப் பெற்றாா். இதன் மூலம் நவ. 14, 15 தேதிகளில் உத்தரபிரதேசம் மாநிலம், நொய்டாவில் நடைபெற உள்ள தேசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் நேரடியாக கலந்துகொள்ளும் வாய்ப்பை அவா் பெற்றுள்ளாா்.

போட்டியில் வெற்றிபெற்ற செந்நிலாவுக்கு, தமிழ்நாடு பேட்மின்டன் அசோசியேஷன் மாநிலச் செயலாளா் அருணாச்சலம், துணைத் தலைவா் மாறன் ஆகியோா் பரிசு வழங்கி பாராட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT