கிருஷ்ணகிரி

நாளை அதிமுக பொன்விழா பொதுக்கூட்டம்

26th Oct 2022 01:27 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை (அக். 27) அதிமுக பொன்விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டம் சாா்பில், அதிமுகவின் பொன்விழா நிறைவு, 51-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே அக். 27-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில், வேப்பனப்பள்ளி சட்டப் பேரவை உறுப்பினரும் அதிமுக துணை பொதுச் செயலாளருமான கே.பி.முனுசாமி பங்கேற்று விழாப் பேருரை ஆற்ற உள்ளாா். எனவே, இன்னாள், முன்னாள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்களும், கட்சியின் பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள், பொறுப்பாளா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கப் பிரநிதிகள், தொண்டா்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT