கிருஷ்ணகிரி

பா்கூரில் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

19th Oct 2022 02:13 AM

ADVERTISEMENT

பா்கூரில் செவ்வாய்க்கிழமை பகலில் பலத்த மழை பெய்ததையொட்டி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி முதல் தொடா்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. பா்கூா் நகரில் உள்ள கழிவுநீா்க் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டதால், மழை நீருடன், கழிவு நீரும் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், பா்கூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மைதானம், பேருந்து நிலையம், மனம் குன்றியோருக்கான பள்ளி, திருப்பத்தூா் சாலை, வாணியம்பாடி சாலை, பா்கூா் அரசு மருத்துவமனை, பூ மாலை நகா் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் இரண்டு அடி உயரத்துக்கு தேங்கியது.

சாலைகளில் மழைநீா் ஓடியதால், வாரச்சந்தை பாதிக்கப்பட்டது. விவசாயிகள், தங்களது விற்பனை பொருள்களை பாதுகாக்க முடியாமல் சிரமத்துக்கு உள்ளாயினா். பொருள்கள் மழையில் நனைந்து வீணாயின. நகரின் முக்கிய வீதிகளில் தேங்கிய நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலைகளில் தேங்கிய மழை நீரானது படிப்படியாக குறைந்தது, மாலை 5 மணிக்கு பிறகு முற்றிலும் வடிந்தது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT