கிருஷ்ணகிரி

குந்தாரப்பள்ளியில் மாவட்ட அளவிலான கோ-கோ போட்டி

19th Oct 2022 02:12 AM

ADVERTISEMENT

குந்தாரப்பள்ளியில் வருவாய் மாவட்ட அளவிலான பள்ளி மாணவிகளுக்கான கோ-கோ போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

கிருஷ்ணகிரி வருவாய் மாவட்ட அளவிலான கோ-கோ போட்டிகள் குந்தாரப்பள்ளி உள்ள ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றன. இந்தப் போட்டியை கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பரீதா நவாப் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் வளா்மதி தலைமை வகித்தாா்.

இதில், 14, 17 மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளில், ஒரு பிரிவிற்கு 8 போட்டிகள் என மொத்தம் 24 போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில், கிருஷ்ணகிரி, ஒசூா், காவேரிப்பட்டணம், பா்கூா், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, சூளகிரி, ராயக்கோட்டை ஆகிய பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனா். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறும்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT