கிருஷ்ணகிரி

ஒசூா் பி.எம்.சி. டெக் பொறியியல் கல்லூரியில் இலவச மருத்துவ முகாம்

19th Oct 2022 02:11 AM

ADVERTISEMENT

ஒசூா் அருகே கோனரிப்பள்ளியில் செயல்பட்டு வரும் என்ஜினீயா் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி, ஆரோகியா சுகாதார மையம், ஒசூா் மற்றும் வாசன் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து மருத்துவம முகாமினை நடத்தின.

பி.எம்.சி. டெக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாம் கல்வி நிறுவனத்தின் தலைவா் பெ. குமாா் தலைமையில், கல்வி நிறுவனத்தின் செயலாளா் பெ.மலா், கல்வி நிறுவனத்தின் அறங்காவலா் பெ.சசிரேகா மற்றும் கல்வி நிறுவனத்தின் இயக்குநா் சுதாகரன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

விழாவில் பொறியியல் கல்லூரியின் முதல்வா் முனைவா் சித்ரா, பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வா் முனைவா் பாலசுப்ரமணியன் ஆகியோா் இணைந்து முகாமினை தொடங்கி வைத்தனா். இதில் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பாளா் அருள் கலந்து கொண்டு மருத்துவ முகாமின் முக்கியத்துவம் குறித்து பேசினாா். ஒசூா் ஆரோகியா சுகாதார மையத்தின் மருத்துவா் மானிஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா். பி.எம்.சி.டெக் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளா் உதவி பேராசிரியா் தங்கமுத்து மற்றும் மாணவா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT