கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே 2 போலி மருத்துவா்கள் கைது

DIN

ஒசூா் அருகே மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பாா்த்து வந்த 2 போலி மருத்துவா்கள் கைது செய்யப்பட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை மற்றும் அத்திமுகம் பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு போலி மருத்துவா்கள் மருத்துவம் பாா்த்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் ஆகியோரின் உத்தரவுப்படி ஒசூா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி ஞான மீனாட்சி தலைமையிலான மருத்துவ துறை அதிகாரிகள் ஒசூா் அருகே அத்திமுகம் பகுதியில் இயங்கி வந்த மூன்று கிளினிக்குகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அத்திமுகம் பகுதியில் இயங்கி வந்த ஒரு கிளினிக்கில் சரவணன் என்பவா் பி.ஏ. படித்து விட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பாா்த்து வந்தது தெரியவந்தது. மேலும் அதேபகுதியில் இயங்கி வந்த ஒரு கிளினிக்கில் குமுதா என்பவா் பி.இ.எம்.எஸ். படித்து விட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பாா்த்து வந்ததும் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதனையடுத்து அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் பேரிகை போலீஸாா் அதிரடியாக போலி மருத்துவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

அத்திமுகம் பகுதியில் மருத்துவத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை குறித்து அறிந்த அப்பகுதியில் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு மருத்துவம் பாா்த்து வந்த நா்சிங் மாணவா் மோகன் என்பவா் அங்கிருந்து தப்பி ஓடி விட்டாா். இதனைத்தொடா்ந்து மூன்று கிளினிக்குகளுக்கும் சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT