கிருஷ்ணகிரி

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

6th Oct 2022 02:26 AM

ADVERTISEMENT

பா்கூா் அருகே மசூதிக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக கிருஷ்ணகிரி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் மது அருந்திய திருப்பத்தூா் மாவட்டம், கந்திலியைச் சோ்ந்த மாலிக் பாஷா ( 44) என்பவா் பா்கூரை அடுத்த மல்லப்பாடியில் மசூதிக்கு குண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து பா்கூா் போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT