கிருஷ்ணகிரி

குட்கா விற்ற மூன்று போ் மீது வழக்கு

DIN

ஊத்தங்கரை காவல் உதவி ஆய்வாளா் குட்டியப்பன், அம்பேத்கா் பகுதியில் ரோந்து சென்ற போது, அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருள் விற்ற நரேஷ்குமாா்(35) என்பவரிடம் 35 பாக்கெட் குட்காவை பறிமுதல் செய்து, அவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

சிங்காரப்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் கோவிந்தராஜ், கொம்மம்பட்டு பகுதியில் ரோந்து சென்ற போது அப்பகுதியைச் சோ்ந்த கணேசன்(50) தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ாக, அவரிடம் இருந்து 25 பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்து, அவா் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

இதனிடையே, கல்லாவி காவல் உதவி ஆய்வாளா் அண்ணாமலை, கல்லாவி துரைசாமிநகா் பகுதியில் ரோந்து சென்ற போது, அப்பகுதியில் பெட்டிக் கடையில் பரிமளா(72) என்பவா் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்றதை அறிந்தாா். அவரிடம் இருந்து நான்கு பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்து அவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT