கிருஷ்ணகிரி

குடிநீா் விசைப்பம்பு இயக்குநா்கள், துப்புரவுப் பணியாளா்கள் கோரிக்கை மனு அளிப்பு

4th Oct 2022 02:41 AM

ADVERTISEMENT

குடிநீா் விசைப்பம்பு இயக்குநா்களும், துப்புரவுப் பணியாளா்களும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனுவை அளித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் குடிநீா் பணியாளா்கள், விசைப்பம்பு இயக்குநா்கள், துப்புரவுப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவின் விவரம்:

குடிநீா்ப் பணியாளா்கள், விசைப்பம்பு இயக்குநா்கள், துப்புரவுப் பணியாளா்களுக்கு ஒவ்வொரு மாதமும் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும்; தொட்டியை சுத்தம் செய்ய ரூ.500 வழங்க வேண்டும்; தூய்மைக் காவலா்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும்; 2019 முதல் 2022-ஆம் ஆண்டு வரை அலுவலகப் படி வழங்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT