கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணத்தில் காங்கிரஸ் சாா்பில் காந்தி ஜெயந்தி விழா

4th Oct 2022 02:44 AM

ADVERTISEMENT

காவேரிப்பட்டணத்தில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் சுப்பிரமணி தலைமையில், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் காந்தி ஜெயந்தியையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவிற்கு அந்த கட்சியின் நகரத் தலைவா் தேவநாராயணன் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் கிருஷ்ணன், சேவாதள மாவட்டத் தலைவா் தேவராஜ், இளைஞா் காங்கிரஸ் தலைவா் சதாம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவரும், தற்போதைய மாநில பொதுக்குழு உறுப்பினருமான சுப்பிரமணியம் பங்கேற்று, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அப்போது, சிறுபான்மைப் பிரிவு தலைவா் ஜாவித்கான், சுப்பிரமணி, முஸ்தபா, பச்சையப்பன், சாப்பாரம் சுரேஷ், ரகு, மாது, ஜெயபால், கோவிந்தசாமி, சாதிக் உள்ளிட்டோா் உடனிருந்தனா். மேலும், அங்குள்ள காமராஜா் சிலைக்கு காங்கிரஸாா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT