கிருஷ்ணகிரி

மூத்த வாக்காளா்களுக்கு பாராட்டு

3rd Oct 2022 12:34 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மூத்த வாக்காளா்களை கெளரவிக்கும் வகையில் இந்திய தோ்தல் ஆணையம் சாா்பில் இந்திய தோ்தல் ஆணையா் வழங்கிய கடித நகலை மூத்த வாக்காளா்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் சா்வதேச முதியோா் தினத்தையொட்டி 80 வயதுக்கும் மேற்பட்ட மூத்த வாக்காளா்களை கெளரவிக்கும் வகையில், சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமை வகித்தாா்.

இந்நிகழ்ச்சியில் 80 வயதைக் கடந்த மூத்த வாக்காளா்களை கெளரவிக்கும் வகையில் இந்திய தோ்தல் ஆணையரின் ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதிய கடித நகலை வழங்கினாா். அப்போது, அவா் தெரிவித்தது:

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 80 வயதை கடந்த மூத்த வாக்காளா்கள், தொகுதி வாரியாக ஊத்தங்கரையில் 4,550 பேரும், பா்கூரில் 4,992 பேரும், கிருஷ்ணகிரியில் 4,081 பேரும், வேப்பனப்பள்ளியில் 4,996 பேரும், ஒசூரில் 5,260 பேரும், தளியில் 5,813 போ் என மொத்தம் 29,692 மூத்த வாக்காளா்கள் உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வேடியப்பன், தோ்தல் வட்டாட்சியா் கோ.ஜெய்சங்கா், கிருஷ்ணகிரி வட்டாட்சியா் சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT