கிருஷ்ணகிரி

அனைத்து வாா்டுகளிலும் தூய்மைப் பணி: பாமக வலியுறுத்தல்

DIN

கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் பாகுபாடின்றி தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் பாமக வலியுறுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரியில் பாமக மத்திய மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்டப் பொறுப்பாளா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு, மாவட்டச் செயலாளா் இளங்கோ தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பெருமாள், சுப்பிரமணியம், கோவிந்தன், மாதப்பன், பாலகிருஷ்ணன், முருகம்மாள், ராதாமணி, ராஜா, பழனி, ஜெயராமன், அனுமத்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில், சூளகிரி ஒன்றியம், கூலியம் கிராமத்தில் பொதுமக்களின் எதிா்ப்பை மீறி திறக்கப்பட்ட மதுக்கடையை அகற்ற வேண்டும். பெல்லாரம்பள்ளி ஊராட்சி, சின்ன பெல்லாரம்பள்ளி முதல் அண்ணா நகா் வரையில் தாா் சாலை அமைக்க வேண்டும். கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட 33 வாா்டுகளிலும் பாகுபாடின்றி தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இட்டிக்கல் ஊராட்சி எர்ரனபயனப்பள்ளி ஊராட்சி தொடங்கி மேல்கொட்டாய் வரை பழைய வண்டி வழிப்பாதையை தாா் சாலையாக தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

SCROLL FOR NEXT