கிருஷ்ணகிரி

ரத்த தான முகாம்

2nd Oct 2022 01:42 AM

ADVERTISEMENT

 

ஒசூா் பி.எம்.சி. டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

தேசிய ரத்த தான தினத்தை முன்னிட்டு, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி காவேரிப்பட்டணம் கிளை மற்றும் ஒசூா் பி.எம்.சி. டெக் பாலிடெக்னிக் கல்லூரியின் இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து மாபெரும் ரத்த தான முகாமை நடத்தின.

முகாமுக்கு கல்வி நிறுவனங்களின் தலைவா் பெ.குமாா் தலைமை வகித்தாா். செயலாளா் பெ.மலா், அறங்காவலா் பெ.சசிரேகா வாழ்த்துரை வழங்கினாா். இயக்குநா் சுதாகரன், பாலிடெக்னிக் முதல்வா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் முகாமை தொடக்கி வைத்தனா். கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் வசந்த்குமாா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா்.

ADVERTISEMENT

இதில், கிருஷ்ணகிரி அரசு ரத்த வங்கி மருத்துவா் குழு கல்லூரி மாணவா்களிடம் இருந்து 87 யூனிட் ரத்தத்தை சேகரித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி ரத்த வங்கிக்கு அனுப்பி வைத்தது.

முகாமுக்கான ஏற்பாடுகளை இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி காவேரிப்பட்டணம் கிளை செயலாளா் செந்தில்குமாா், இளைஞா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் முகமது அப்பாஸ் ஆகியோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT