கிருஷ்ணகிரி

போட்டித் தோ்வா்களுக்கு இலவச பயிற்சி

2nd Oct 2022 01:42 AM

ADVERTISEMENT

 

மத்திய அரசின் போட்டித் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு, கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அக். 6-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கொளரிசங்கா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தற்போது மத்திய அரசு பணியாளா் தோ்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள 20 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கான தோ்வுக்கு  இணைதளத்தில் விண்ணப்பிக்க அக். 6-ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் அக். 6-ஆம் தேதி காலை 11 மணி முதல் கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள்  கூகுள் படிவத்தில் விண்ணப்பிக்கவும். மேலும், விவரங்களுக்கு 04343 - 291983 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT