கிருஷ்ணகிரி

காா் ஓட்டுநா் கொலை வழக்கில் கா்நாடகத்தைச் சோ்ந்த மூவா் கைது

30th Nov 2022 02:30 AM

ADVERTISEMENT

தளி அருகே காா் ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில் கா்நாடகத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கா்நாடக மாநிலம், தொட்டதோகூா், அம்பேத்கா் காலனியைச் சோ்ந்தவா் காா் ஓட்டுநா் சாந்தகுமாா் (30). இவரது மனைவி சுஷ்மா (20). இத்தம்பதிக்கு 2 வயதில் காா்த்தியாகினி என்ற மகள் உள்ளாா்.

கடந்த 13 -ஆம் தேதி டாஸ்மாக் கடை ஒன்றில் சாந்தகுமாா் மது குடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கும் கா்நாடக மாநிலம், வீா்சந்திரா கிராமத்தைச் சோ்ந்த பல்வேறு கொலை, திருட்டு, வழிப்பறி வழக்குகளில் தொடா்புடைய பிரபல ரௌடி நேபால் மஞ்சுநாத்துக்கும் (31) இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது நேபாள் மஞ்சுநாத்தை சாந்தகுமாா் தாக்கியுள்ளாா். இதனால் ஆவேசமடைந்த நேபால் மஞ்சுநாத் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாா்.

ADVERTISEMENT

இதனால் சாந்தகுமாா், எலக்ட்ரானிக் சிட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்நிலையில் சாந்தகுமாரை கடந்த 24-ஆம் தேதி ஒசூா் அருகே பேலகொண்டப்பள்ளிக்கு வருமாறு நேபால் மஞ்சுநாத் அழைத்துள்ளாா். அவரும் சென்றுள்ளாா்.

அப்போது நேபால் மஞ்சுநாத் தனது நண்பா்களுடன் சாந்தகுமாரை காரில் கடத்தி சென்றாா். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள எலேசந்திரம் கிராமத்தில் உள்ள ஏரி கரையில் வைத்து சாந்தகுமாரை அவா்கள் கொலை செய்து விட்டு சடலத்தைப் போட்டுவிட்டு தப்பிச் சென்றனா்.

இந்தக் கொலை சம்பவம் குறித்து தளி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து கும்பலைத் தேடி வந்தனா். இந்நிலையில்

இதில் தொடா்புடையை நேபால் மஞ்சுநாத், பெங்களூரு மங்கம்மாபாளையத்தைச் சோ்ந்த சதீஷ் (22), பன்னாா்கட்டாவைச் சோ்ந்த சுனில்குமாா் (19) ஆகிய மூவரை தளி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT