கிருஷ்ணகிரி

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

30th Nov 2022 02:28 AM

ADVERTISEMENT

திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவின் பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் 500 மகளிருக்கு நல உதவிகளை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

விழாவுக்கு நகரச் செயலாளா் எஸ்.கே.நவாப் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தே.மதியழகன், 500 பெண்களுக்கு நல உதவிகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் நகா்மன்ற தலைவா் பரிதா நவாப், துணைத் தலைவா் சாவித்திரி, கடலரசு மூா்த்தி, மாவட்ட அவைத் தலைவா் தட்ரஅள்ளி நாகராஜ், நகா்மன்ற உறுப்பினா்கள் செந்தில்குமாா், பாலாஜி, தேன்மொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பென்னாகரத்தில்...

பென்னாகரம், அரசு மருத்துவமனையில் பிறந்த நான்கு பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க நாணயத்தை திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் பி.தா்மசெல்வன் வழங்கினாா்.

ADVERTISEMENT

நாகதாசம்பட்டி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிறந்த 2 குழந்தைகள், பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, ஏரியூா் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் ஆகியவற்றில் தலா ஒரு குழந்தை என நான்கு குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் வீதம் தங்க நாணயங்கள், பழங்கள், ஊட்டச்சத்து பொருள்களை திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், மாநில வா்த்தகா் அணி துணை செயலாளருமான பி.தா்மச் செல்வன் வழங்கினாா்.

இதில் மாவட்டத் துணைச் செயலாளா் சப்தகிரி உமாசங்கா், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் சோலை மணி, வேலுமணி, மாவட்ட வா்த்தகா் அணி துணை செயலாளா் எல்.ஜி.குமாா், மாவட்ட மீனவா் அணி துணை அமைப்பாளா் கே.பி.வைத்தியலிங்கம், கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT