கிருஷ்ணகிரி

மின்துறையை தனியாா்மயமாக்க எதிா்ப்பு

30th Nov 2022 02:29 AM

ADVERTISEMENT

மின்துறையை பொதுத் துறையாகவே பாதுகாக்க வேண்டும் என கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் சிறப்புப் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்ததுக்கு கிளைத் தலைவா் செளந்தரபாண்டியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நரசிம்மன் , மாநில துணைச் செயலாளா் கணேசன், பொருளாளா் சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மின் துறையை பொதுத் துறையாகவே பாதுகாக்க வேண்டும். தனியாா் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், மின்சார திருத்தம் மசோதாவை திரும்ப பெற வேண்டும். கடந்த ஏப். 12-ஆம் தேதி வெளியான மின்சார ஆணையை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT