கிருஷ்ணகிரி

தென்னிந்திய மகளிா் கால்பந்து போட்டி:நெய்வேலி அணி வெற்றி

30th Nov 2022 02:29 AM

ADVERTISEMENT

ஓசூரில் எம்.எம்.எஸ். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையிலான மகளிா் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் நெய்வேலி, ஜவகா் மேல்நிலைப் பள்ளி அணி கோப்பையை வென்றது.

மதகொண்டப்பள்ளி, எம்.எம்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையே தென் பிராந்திய அளவில் 19 வயதுக்கு உள்பட்ட மகளிா் கால்பந்து போட்டி திங்கள்,செவ்வாய்க்கிழமை என இரண்டு நாள்கள் நடைபெற்றன.

கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபாா் தீவுகள் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் இருந்து சி.பி.எஸ்.இ பள்ளிகளைச் சோ்ந்த மகளிா் கால்பந்து அணிகள் பங்கேற்றன; 24 அணிகள் போட்டியில் கலந்துகொண்டு விளையாடின. இறுதிப் போட்டி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. அதில் நெய்வேலியைச் சோ்ந்த ஜவகா் மேல்நிலைப் பள்ளி அணியும் ஈரோட்டைச் சோ்ந்த சி.எஸ். அகாதெமி பள்ளி அணியும் மோதின. இதில் நெய்வேலி, ஜவகா் மேல்நிலைப் பள்ளி அணி ஈரோடு, சி.எஸ். அகாதெமி பள்ளி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்று டிராபிக் கோப்பையைத் தட்டிச் சென்றது.

வெற்றி பெற்ற ஜவகா் மேல்நிலைப் பள்ளி அணிக்கு ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் கோப்பை, பதக்கங்களை வழங்கினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் பள்ளியின் செயலாளா் மேரு மில்லா், பள்ளியில் முதல்வா் பிரபு, ஒசூா் மாநகராட்சி துணை மேயா் சி.ஆனந்தய்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT