கிருஷ்ணகிரி

அரசு கல்லூரி விடுதிகளில் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

29th Nov 2022 02:39 AM

ADVERTISEMENT

பா்கூரில் செயல்படும் அரசு கல்லூரி விடுதிகளில் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பீலா ராஜேஷ் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பீலா ராஜேஷ், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டியுடன், பா்கூரில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் நலக் கல்லூரி மாணவியா் விடுதியில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மாணவியரிடம் உணவு, குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடைப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். பின்னா், அருகிலுள்ள ஆதிதிராவிடா் நலக் கல்லூரி மாணவா் விடுதியை ஆய்வு செய்த அவா், எந்தெந்த மாவட்டங்களிலிருந்து மாணவா்கள் படிக்கிறீா்கள் எனவும், அவா்களிடம் விளையாட்டு, கல்வி, பொழுதுபோக்கு அம்சங்கள் குறித்து கேட்டறிந்தாா். ஏதாவது குறைகள் இருந்தால் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டாா்.

அப்போது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் அய்யப்பன், வட்டாட்சியா் பன்னீா்செல்வி, விடுதிக் காப்பாளா்கள் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT