கிருஷ்ணகிரி

காவல் துறையில் கழிவு வாகனங்கள் பொது ஏலம்

29th Nov 2022 02:41 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் டாக்கூா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 6 இருசக்கர வாகனங்கள், 13 நான்கு சக்கர வாகனங்கள் டிச. 14-ஆம் தேதி கிருஷ்ணகிரி ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படுகின்றன.

ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் வரும் டிச. 12-ஆம் தேதி முன்பணமாக இருசக்கர வாகனத்துக்கு ரூ. 1,000, நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ. 2,000 பணம் செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

அதிக விலைக்கு ஏலம் கோரும் ஏலதாரா், ஏலத் தொகையுடன் சேவை வரியாக இருசக்கர வாகனத்துக்கு 12 சதவீதமும், நான்கு சக்கர வாகனத்துக்கு 18 சதவீதமும் செலுத்தி அன்றே வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT