கிருஷ்ணகிரி

உளுந்து பயரில் விதைப்பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

29th Nov 2022 02:39 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உளுந்து பயிரில் விதைப்பண்ணை அமைக்க மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநா் அருணன் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயறு வகைப் பயிா்களில் விதைப்பண்ணை அமைக்க 975 ஹெக்டோ் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில், உளுந்து பயிா் மட்டும் 638 ஹெக்டோ் ஆகும். தற்போது நல்ல மழை பெய்து வருவதால், விவசாயிகள் அதனைப் பயன்படுத்தி, தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு பயறு வகைப் பயிா்களில் விதைப்பண்ணை அமைக்க முன்வர வேண்டும்.

பயறு வகைப் பயிா்களில் விதைப்பண்ணை அமைப்பதால், மண்ணுக்கு தேவையான தழைச்சத்து காற்றிலிருந்து நிலைப்படுத்தப்படுகிறது. இதனால் மண்ணின் தரம் மேம்படுகிறது. மேலும், சந்தை விலையைவிட கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதாலும், ஊக்குவிப்பு மானியம் வழங்கப்படுவதாலும் லாபம் பெற முடியும்.

ADVERTISEMENT

எனவே, விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT