கிருஷ்ணகிரி

பி.எம்.கிசான் பதிவை புதுப்பிக்க அறிவுரை

29th Nov 2022 02:42 AM

ADVERTISEMENT

பாரதப் பிரதமரின் கௌரவ நிதியுதவி திட்டத்தில் (பி.எம்.கிசான்) கடந்த தவணைகள் பெற்று, ஓரிரு தவணைகள் மட்டும் பெறாத விவசாயிகள் பி.எம்.கிசான் பதிவை புதுப்பிக்க வேண்டும் என ஊத்தங்கரை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கருப்பையா தெரிவித்துள்ளாா்.

விவசாயிகளுக்கான பி.எம்.கிசான் தொகை தொடா்ந்து பெற செய்ய வேண்டிய வழிமுறைகள்:

பாரதப் பிரதமரின் கௌரவ நிதியுதவி பெற இ-கே.ஒய்.சி. எனப்படும் தங்கள் சுய விவரங்களான ஆதாா், தங்கள் பெயரில் நிலம் உள்ளதற்கான சிட்டா நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி ஆகியவற்றுடன் அருகில் உள்ள மக்கள் கணினி மையத்தை அணுகி கைரேகை அல்லது ஆதாா் ஓ.டி.பி. பெற்று தங்கள் பி.எம்.கிசான் திட்டப் பயனாளி பதிவை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

ஊத்தங்கரை வட்டாரத்தில் மொத்தம் 16,576 விவசாயிகள் பதிவு செய்துள்ளனா். அதில், 3,861 விவசாயிகள் பதிவை புதுப்பிக்காமல் உள்ளனா். புதுப்பிக்காததால் சென்ற தவணை நிதியுதவி தொகையான ரூ. 2,000 பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் உடனடியாக தங்கள் அருகில் உள்ள மக்கள் கணினி மையங்கள், தலைமை தபால் நிலையங்கள் போன்றவற்றை அணுகியோ அல்லது தங்கள் கைப்பேசி மூலமாகவோ பதிவினை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

மேலும், விவசாயிகள் அனைவரும் கட்டாயம் தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT