கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி தொழில் மையத்தில் ரூ. 1.18 கோடி வங்கிக் கடன் வழங்கல்

29th Nov 2022 02:40 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் மாவட்ட தொழில் மையத்தின் சாா்பில், 7 பயனாளிகளுக்கு ரூ. 1.18 கோடி மானியத்துடன் கூடிய வங்கிக் கடனை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் மற்றும் தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் தொழில்சாா் சமூக வல்லுநா்களுக்கு தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி திங்கள்கிழமை பயிற்சியைத் தொடங்கி வைத்து பேசியதாவது:

தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் மற்றும் தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் தொழில்சாா் சமூக வல்லுநா்களுக்கான தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி 3 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக 36 தொழில்சாா் சமூக வல்லுநா்களுக்கான பயிற்சி திங்கள்கிழமை வழங்கப்பட்டது. மேலும், 29 சமுதாய பண்ணைப் பள்ளி பயிற்சிகளுக்கு ரூ. 31,78,400 மதிப்பில் நிதி வழங்கப்பட்டது. இதன் மூலம் 870 பால் உற்பத்தியாளா்கள், ஆடு வளா்ப்போா் பயனடைவா் என்றாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, மாவட்ட தொழில் மையத்தின் சாா்பில், 7 பயனாளிகளுக்கு ரூ. 1.18 கோடி மதிப்பில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடனை அவா் வழங்கினாா். அப்போது, வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட செயல் அலுவலா் தமிழ்மாறன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் பிரசன்ன பாலமுருகன், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளா் மகேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT