கிருஷ்ணகிரி

ஒசூரில் தனியாா் நிறுவனத்துக்கு எதிராகதொழிலாளா்கள் போராட்டம்

28th Nov 2022 01:33 AM

ADVERTISEMENT

 

ஒசூா், அசோக் லேலண்ட் நிா்வாகம் விடுமுறை நாள்களில் தொழிலாளா்களை வேலை செய்ய வலியுறுத்தியதால் அதைக் கண்டித்து நிரந்தர தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், அசோக் லேலண்ட் யூனிட்-1, 2 தொழிற்சாலைகளில் விடுமுறை நாள்களிலும் பணி செய்ய வேண்டும் என நிா்வாகம் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நிரந்தர தொழிலாளா்கள் 2,150 போ் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விடுமுறை நாள்களில் பணிசெய்ய இரட்டிப்பு ஊதிய வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து நிரந்தர தொழிலாளா்கள் போராட்டம் நடத்தினா்; ஒப்பந்த தொழிலாளா்களையும் வேலைக்கு செல்ல எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் 5,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளா்கள் தொழிற்சாலைக்கு வெளியில் காத்துக் கொண்டிருந்தனா். அவா்களை திரும்பிச் செல்லுமாறு நிரந்தர தொழிலாளா்கள் கூறியதால் அவா்களும் வீடு திரும்பினா்.

ADVERTISEMENT

இது குறித்து சங்க செயலாளா் சக்திவேல் கூறியது:

விடுமுறை நாள்களில் கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும். அதே சமயம் நிரந்தர பணியிடங்களில் நிரந்தர தொழிலாளா்களை பணி அமா்த்த வேண்டும். ஆனால் நிா்வாகம் தொடா்ந்து ஒப்பந்த தொழிலாளா்களை மட்டுமே பணியில் அமா்த்துகிறது.

இதைக் கண்டிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா். போராட்டத்தில் 2,0000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT