கிருஷ்ணகிரி

ஒசூா் ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தில்மருத்துவ முகாம்

27th Nov 2022 02:47 AM

ADVERTISEMENT

 

ஒசூா், ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தில் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமை பெங்களூரு, நாராயண இருதாயலா மருத்துவமனையும், ஒசூா், ரெப்கோ நுண்கடன் நிறுவனமும் இணைந்து நடத்தின.

ஒசூா் ரெப்கோ வங்கி வாடிக்கையாளா்கள், ரெப்கோ நுண்கடன் நிறுவன வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டு ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், இருதய நோய் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து கொண்டனா்.

ADVERTISEMENT

வங்கி அலுவலா்கள், வங்கி வாடிக்கையாளா்களும் சிறப்பான வாழ்வைப் பெற வேண்டும் என நோக்கில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் 100-க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டு பயனடைந்ததாக ரெப்கோ நுண் கடன் நிறுவன அலுவலா் ராஜசேகா் தெரிவித்தாா். ரெப்கோ நுண்கடன் நிறுவன அலுவலா்கள் முகாம் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT