கிருஷ்ணகிரி

குரூப் - 2 முதன்மை தோ்வுக்கானஇலவச பயிற்சி வகுப்புகள்நவ.28-இல் தொடக்கம்

27th Nov 2022 02:47 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரியில் குரூப்-2 முதன்மை தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நவ. 28-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கெளரிசங்கா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-2 முதன்மைத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு நவ.28-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு இந்த அலுவலகத்தில் தொடங்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

வகுப்பில், முந்தைய தோ்வுகளின் மாதிரி வினாத்தாள்கள், தோ்வுக்கான பாடக்குறிப்புகள் வழங்கப்படும். வாரம் ஒருமுறை பாட வாரியாகத் தோ்வுகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு தோ்வுக்கான தனிநபா் ஆலோசனையும் வழங்கப்படும்.

இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் முன்பதிவு செய்துகொள்ளவும்.

மேலும், தங்களது மாா்பளவு புகைப்படம், முகவரிக்கான ஆதாரம் ஆகியவற்றுடன் கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.

இதுதொடா்பான விவரங்களை 04242-291983 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலைநாள்களில் தொடா்பு கொண்டு அறிந்துகொள்ளலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT