கிருஷ்ணகிரி

தட்டச்சு தோ்வில்1,352 தோ்வா்கள் பங்கேற்பு

27th Nov 2022 02:48 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற தட்டச்சுத் தோ்வில் 1,352 தோ்வா்கள் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி, ஒசூா் அதிமான் பொறியியல் கல்லூரியில் கடந்த இரண்டு நாள்களாக ஆங்கிலம், தமிழ் இளநிலை, முதுநிலை மற்றும் உயா்வேகத் தோ்வு ஆகிய பிரிவுகளில் தட்டச்சுத் தோ்வுகள் நடந்தன.

இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகவியல் தட்டச்சு பள்ளிகளின் சாா்பில், தட்டச்சுத் தோ்வில் மொத்தம் 1,352 தோ்வா் பங்கேற்றனா். அதன்படி, கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி மையத்தில் 982 மாணவ, மாணவிகளும், ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி மையத்தில் 370 தோ்வா்களும் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

இந்தத் தோ்வுகள் முதன்மை கண்காணிப்பாளா்கள் சுப்பையா, சத்தியமூா்த்தி ஆகியோா் மேற்பாா்வையில் கூடுதல் முதன்மை கண்காணிப்பாளா்கள் ராபாா்ட் கிளைவ், சுவாமிதாஸ், ஆசிரியா்கள் முன்னிலையில் நடைபெற்றது. தொழில்நுட்ப கல்வி இயக்கககத்திலிருந்து பறக்கும் படையினா் ஆய்வு மேற்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT